பிரான்சில் தேவாலயங்களுக்கு ராணுவ பாதுகாப்பு..!
பிரான்சு நாட்டில் உள்ள கிறித்தவ தேவாலயங்களுக்கு ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் கிடைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே நபிகள் நாயகத்தின் கேலி சித்திரம் குறித்து பிரான்சு அதிபர் தெரிவித்த கருத்துக்கு பல்வேறு நாடுகளில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் பிரான்சில் இது வரை 3 பாதிரியார்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து கிறித்தவ தேவாலயங்களுக்கும் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Comments