ஐபிஎல்: பெங்களூர் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி அணி

0 2603
ஐபிஎல்: பெங்களூர் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி அணி

ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அபுதாபியில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணியில் அதிகபட்சமாக தேவ்தத் 50 ரன்களையும், டிவிலியர்ஸ் 35 ரன்களை சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களை சேர்த்தது.

இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியில் அதிகபட்சமாக ரஹானே 60 ரன்களையும், தொடக்க வீரர் தவான் 54 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் 19 ஓவர்களில் டெல்லி அணி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை உறுதி செய்துள்ள டெல்லி அணி, முதல் பிளே ஆப் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments