மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மரணத்தில் மர்மம் என புகார்

0 2320
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மரணம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி, பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜித்தன் ராம் மன்ஜியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறது.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராஜ் பாஸ்வான், தனது தந்தையின் உடல்நிலை குறித்து ஜித்தன் ராம் மன்ஜிக்கு தொலைபேசியில் விளக்கியதாக கூறினார்.

இருப்பினும் தனது தந்தை உயிருடன் இருக்கும் போது அவரை வந்து பார்க்காமல், தற்போது அக்கறை இருப்பது போல் காட்டி அரசியல் செய்வதாக குற்றம்சாட்டி இருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments