நீட் தேர்வு எழுதும் மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்ற நிபந்தனை விதிப்பது குறித்து தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வு எழுதும் மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்ற நிபந்தனை விதிப்பதை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசு, தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்வறையில் கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், தாலி, மெட்டி காதணி, மூக்குத்தி போன்ற ஆபரணங்களை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதமானது என மனுதாரர் தெரிவித்துள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் அமர்வு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, உத்தரவிட்டனர்.
Comments