சென்னை தி.நகர் நகை கடை கொள்ளை வழக்கு-மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மீட்பு

0 2198

சென்னை தியாகராயர் நகர் நகை கடை கொள்ளை வழக்கில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், வழக்கறிஞர் கட்டணமாக கொடுத்து வைக்கப்பட்டிருந்த வைரக் கம்மல் உள்பட ஒன்றரை கிலோ தங்க வைர நகைகள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் அருகே கொள்ளையன் மார்க்கெட் சுரேஷின் காதலி கங்காவின் வீட்டிற்கு பின்புறம் பாலீத்தின் கவரில் வைத்து மண்ணிற்குள் புதைத்து வைக்கப்பட்ட தங்க, வைர நகைகளை மாம்பலம் தனிப்படை போலீசார் மீட்டுள்ளனர்.

மேலும், மார்க்கெட் சுரேஷின் வழக்கறிஞரை பிடித்து விசாரித்ததில், அவருக்கு கட்டணமாக வைர கம்மல் ஒன்றை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. நகைகளை கொடுத்து வைத்திருந்த பழைய குற்றவாளியான அமல்ராஜ் என்பவனையும் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments