போதைப் பொருள் வழக்கு-தீபிகா படுகோனேயின் மேலாளர் கரிஷ்மா தொடர்ந்து தலைமறைவு

0 2241

போதைப் பொருள் வழக்கு விசாரணையில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், நடிகை தீபிகா படுகோனேயின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் (Karishma Prakash) தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.

இந்தி நடிகர் சுசாந்த் சிங் மர்ம மரணம் குறித்த வழக்கு விசாரணையின் போது, போதை பொருள் குறித்த கரிஷ்மாவின்  சாட்டிங் தகவல் கிடைத்தது.

இதனால் அவரிடமும், தீபிகா படுகோனேயிடமும் செப்டம்பர் மாதம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். மேலும் கரிஷ்மா வீட்டில் கடந்த வாரம்  சோதனை நடத்தி  கஞ்சா எண்ணெய் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் விசாரணை ஆஜராகும்படி சம்மன் அனுப்பியநிலையில், அவர் தலைமறைவாகிவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments