ஜோ பைடனின் பிரச்சார பேருந்தை டிரம்ப் ஆதாரவாளர்களின் வாகனங்கள் சுற்றி வளைத்த சம்பவம் - FBI விசாரணை
ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் பிரச்சார ஊழியர்கள் வந்த பேருந்தை, டிரம்பின் ஆதாரவாளர்கள் வந்த வாகனங்கள் சுற்றி வளைத்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக FBI தெரிவித்துள்ளது.
டெக்சாஸ் நெடுஞ்சாலையில் நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோவை மறுடுவீட் செய்த டிரம்ப்,ஐ லவ் டெக்சாஸ் என்றும் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால், டெக்சாஸில் நடக்க இருந்த ஜோ பிடனின் இரண்டு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது.
தங்களது கட்சித் தொண்டர்களை மிரட்டும் வேலையில் டிரம்ப் ஈடுபட்டுள்ளதாகவும் ஜனநாயக கட்சி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments