நொய்யார் வனவியல் பூங்காவில் இருந்து தப்பிச் சென்ற பெண் புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது
கேரள மாநிலம் நொய்யார் வனவியல் பூங்காவில் பிடிபட்ட நிலையில் தப்பிச் சென்ற பெண் புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டிய சியம்பம், அம்பத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆடு, மாடுகளை கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி கடந்த 26-ம் தேதி வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது.
இதையடுத்து, திருவனந்தபுரம் நொய்யார் வனவியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட புலி, அங்கிருந்தது கூண்டின் கம்பிகளை கடித்து வளைத்து தப்பியது.
இதையடுத்து, கேரள வனத்துறையினர் தனிப் படை அமைத்து அப்பகுதி முழுவதும் தேடிய நிலையில், புதர் ஒன்றுக்கு மறைந்திருந்ததை கண்டறிந்து, மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
Comments