அக்டோபரில் சரக்கு ரயில்களில் 10.81 கோடி டன் சரக்குகளைக் கையாண்ட ரயில்வே
அக்டோபர் மாதத்தில் சரக்கு ரயில்களில் 10 கோடியே 81 லட்சம் டன் சரக்குகளை ஏற்றிச் சென்றுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
கொரோனா சூழலில் சாலைப் போக்குவரத்து தடைபட்டபோதும் ரயில்வே சரக்குப் போக்குவரத்து நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து தக்க வைப்பதுடன் மேலும் ஊக்குவிப்பதற்காக உருக்கு, சிமென்ட், மின்சாரம், நிலக்கரி, வாகன உற்பத்தித் தொழில்துறையின் தலைவர்களுடன் ரயில்வே பல்வேறு பேச்சுக்களை நடத்தியது.
இதன் விளைவாக அக்டோபர் மாதத்தில் சரக்கு ரயில்களில் 10 கோடியே 81 லட்சம் டன் சரக்குகளை ஏற்றிச் சென்றுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட 15 விழுக்காடு அதிகம் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
Freight figures continue to maintain the high momentum in terms of earnings & loading in the month of October 2020 for Indian Railways.
— Ministry of Railways (@RailMinIndia) November 1, 2020
Loading was 108.16 million tonnes which is 15% higher compared to last year’s loading for the same period.https://t.co/GMpa2I77Zo pic.twitter.com/OdOhb6VuTY
Comments