சமாஜ்வாதி கட்சியைத் தோற்கடிக்க பாஜகவுக்கு ஆதரவளிக்கத் தயார் - மாயாவதி

0 4944
சமாஜ்வாதி கட்சியைத் தோற்கடிக்க பாஜகவுக்கு ஆதரவளிக்கத் தயார் - மாயாவதி

சமாஜ்வாதிக் கட்சியைத் தோற்கடிக்கத் தேவைப்பட்டால் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கப் போவதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மீண்டும் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் சட்டமேலவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது சமாஜ்வாதிக் கட்சி தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான செயல்பாடுகளைக் கொண்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

சட்டமேலவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிக்கத் தேவைப்பட்டால் பாஜகவுக்கோ, வேறு எந்தக் கட்சிக்கோ பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவளிக்கும் என்றும் மாயாவதி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments