தேசிய கல்விக் கொள்கையில் M.Phil., படிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் M.Phil., Ph.D., படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
தேசியக் கல்விக் கொள்கையில் M.Phil., படிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் M.Phil., Ph.D., படிப்புகளில் சேர இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் M.Phil., Ph.D., படிப்புகளில் சேர www.b-u.ac.in என்கிற இணையத்தளத்தில் நவம்பர் 20 வரை விண்ணப்பிக்கலாம்.
தேசியக் கல்விக் கொள்கையில் M.Phil., படிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில், அதில் சேருவதற்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகத் தமிழக அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்காத நிலையில், பாரதியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Comments