7 மாத இடைவெளிக்குப் பின்னர் வெளிநாட்டு யாத்ரீகர்கள் மெக்காவுக்கு வர சவுதி அரசு அனுமதி
7 மாத இடைவெளிக்குப் பின்னர் வெளிநாட்டு யாத்ரீகர்கள் மெக்காவுக்கு வர சவுதி அரசு அனுமதியளித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு அமைச்சர் அம்ர் அல் மத்தா பேசும்போது, உம்ரா செய்வதற்காக வெளிநாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
இதற்காக சவுதி வருபவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், 50 மற்றும் அதற்கு மேல் வயதுள்ளவர்கள் கொரோனாவுக்காக தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
Saudi Arabia allows foreign pilgrims to enter for Umrah https://t.co/yWPxJmUOil pic.twitter.com/l4lnKLnXvj
— Al Jazeera News (@AJENews) November 1, 2020
Comments