கொரோனா தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்ததால் வீட்டுத் தனிமையில் WHO தலைவர்

0 5242

கொரோனா தொற்று உறுதியான சிலருடன் தொடர்பில் இருந்ததால் தம்மை சுய தனிமைக்கு ஆட்படுத்திக் கொண்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதாநோம் கெப்ரேயெசஸ் தெரிவித்துள்ளார்.

டுவிட் பதிவில் இதைத் தொரிவித்துள்ள அவர், தாம் நன்றாக இருப்பதாகவும், கொரோனா அறிகுறிகள் எதுவும் தமக்கு காணப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எனினும் உலக சுகாதார அமைப்பின் சிகிச்சை மரபுகளின் படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு அலுவல்களை கவனிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments