ஆர்மேனியா- அஜர்பைஜான் போரில் அப்பாவிகள் ரத்தம் சிந்துவதை தடுக்க இரு நாடுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க போப் பிரான்சிஸ் வேண்டுகோள்
ஆர்மேனியா- அஜர்பைஜான் இடையே நடைபெற்று வரும் போரில் அப்பாவிகள் ரத்தம் சிந்துவதை தடுக்கும் வகையில் போரிடும் நாடுகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செயிண்ட்பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடந்த பிரார்த்தனை நிகழ்ச்சியில் பேசிய அவர், வன்முறையுடன் இந்த பிரச்னையை தீர்க்க வேண்டாம் என்றும் சர்வதேச நாடுகளின் உதவியுடன் நேர்மையான பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்த்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
இதனை அடுத்து துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு போப் பிரான்சிஸ் அஞ்சலி செலுத்தினார்.
Comments