கடந்த ஆண்டு ஒரு கோடிக்கும் மேலான ரயில்வே டிக்கெட்டுகள் காத்திருப்பு பட்டியலில் இருந்ததால் தானாக ரத்தானதாக ரயில்வேத் துறை அறிவிப்பு
ரயில்களில் முன்பதிவின்போது காத்திருப்புப் பட்டியலில் இருந்ததால், கடந்த ஆண்டு ஒரு கோடி டிக்கெட்டுகள் தானாகவே ரத்தானதாக தெரிய வந்துள்ளது.
தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ரயில்வேத் துறை அளித்த பதிலில் இந்த விவரம் கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்து மிகுந்த பாதைகளில் ரயில் பற்றாக்குறை காரணமாக இவ்வாறு நேர்ந்ததாகவும், தனியார் ரயில்களை அனுமதிப்பதன் மூலம் காத்திருப்பு பட்டியலில் இருப்போரின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்திருப்பதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments