பாகிஸ்தான் ஆக்ரமித்த பகுதிகளுக்கும் சேர்த்து உரிமை கோரியது இந்தியா..!

0 13126
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு செய்துள்ள காஷ்மீரின் பகுதிகள் அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிலப்பகுதிகள் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. கில்ஜித் -பல்திஸ்தானுக்கு மாகாண அந்தஸ்து கொடுக்கப் போவதாக இம்ரான்கான் அறிவித்ததற்கும் இந்தியா கண்டனத்தை பதிவுசெய்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு செய்துள்ள காஷ்மீரின் பகுதிகள் அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிலப்பகுதிகள் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. கில்ஜித் -பல்திஸ்தானுக்கு மாகாண அந்தஸ்து கொடுக்கப் போவதாக இம்ரான்கான் அறிவித்ததற்கும் இந்தியா கண்டனத்தை பதிவுசெய்துள்ளது.

பாகிஸ்தானால் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீரின் கில்ஜித் -பல்திஸ்தான் பகுதிகளில் தேர்தலை நடத்தி அவற்றை பாகிஸ்தானின் மாகாணமாக இணைக்க பிரதமர் இம்ரான் கான் முயற்சி மேற்கொண்டுள்ளார். அப்பகுதியில் இந்துக்கள் , சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது ராணுவ அடக்குமுறைகளும் மனித உரிமை மீறல்களும் நடைபெறுவதாக ஐ.நா.மனித உரிமைக் குழுவிடம் இந்தியா புகார் அளித்துள்ளது. இதனைக் கண்டித்து ஏராளமான போராட்டங்களையும் ஆக்ரமிப்பு காஷ்மீர் மக்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாத்சவா , பாகிஸ்தானால் பலவந்தமாகவும் சட்டவிரோதமாகவும் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட கில்ஜித் -பல்திஸ்தானை உள்ளடக்கிய லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் தாம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஆக்ரமிப்பு பகுதிகளில் அதிகாரம் செலுத்த பாகிஸ்தானுக்கு எந்த வித உரிமையும் இல்லை என்றும் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக ஆக்ரமிப்பு பகுதிகளில் வாழும் மக்களுக்கு எந்த வித அடிப்படை உரிமைகளையும் பாகிஸ்தான் வழங்கவில்லை என்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் பலவந்தத்தால் அங்கு மனித உரிமைகள் நசுக்கப்படுவதாகவும் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments