திருப்பதி - 226 நாட்களுக்குப் பின்னர் கோவிலை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த மலையப்ப சுவாமி

0 19289
திருப்பதி - 226 நாட்களுக்குப் பின்னர் கோவிலை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த மலையப்ப சுவாமி

திருப்பதி - திருமலையில், 226 நாட்களுக்குப்பின், ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி கோவிலை விட்டு முதன்முறையாக வெளியே வந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல், கோவிலுக்குள் அனைத்து சேவைகளும் பக்தர்கள் இல்லாமல் நடத்தப்பட்டு வந்தது.

கொரோனாவின் தாக்கம் குறைந்ததைத் தொடர்ந்து, 8 மாதங்களுக்குப்பின் சோதனை முறையில் ஆர்ஜித சேவை உற்சவம் நடைபெற்றது. கோவிலை விட்டு வெளியே வந்து காட்சி அளித்த மலையப்ப சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வருகிற 7 ஆம் தேதி, ஆர்ஜித சேவை துவங்குகிறது.

ஆன்லைன் மூலம் பதிவு செய்து, வீட்டில் இருந்தே பக்தர்கள் தரிசிக்கவும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

ஏழுமலையானை தரிசனம் செய்ய இந்த டிக்கெட்டுகளுடன் 300 ரூபாய் சிறப்பு நுழைவு டிக்கெட்களையும் பெற வேண்டும் என திருப்பதி - திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments