நெருங்கி வரும் தீபாவளி - பெருநகரங்களில் களைகட்டிய வியாபாரம்

0 3283
நெருங்கி வரும் தீபாவளி - பெருநகரங்களில் களைகட்டிய வியாபாரம்

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில், சென்னை தி.நகரில் புத்தாடைகள், இனிப்புப் பலகாரங்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார், முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை திருப்பி அனுப்பினர்.

மதுரை மேலமாசி வீதி, விளக்குத்தூண், வடக்குமாசி வீதி, சிம்மக்கல் பகுதிகளிலும் தீபாவளி பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர்.

சேலம் 4ரோடு, புதிய பேருந்து நிலையம், சின்னக்கடை வீதிகளில் திரண்ட மக்கள், உற்சாகத்துடன் புத்தாடைகள், இனிப்புகளை வாங்கிச் சென்றனர். திருச்சி பெரியகடைவீதி, சின்னக்கடை வீதிகளிலுள்ள நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், பாத்திரக் கடைகளில் குவிந்த மக்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை.

கோவை ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, பெரியகடை வீதி, கிராஸ்கட் சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் குவிந்த மக்கள் ஆர்வத்துடன் தீபாவளிப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments