மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடம் இருந்த பொறுப்புகள் அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் ஒப்படைப்பு

0 6650
மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடம் இருந்த பொறுப்புகள் அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் ஒப்படைப்பு

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் K.P. அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பாக வேளாண்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று, K.P. அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதன்படி, K.P. அன்பழகன், இனி உயர்கல்வித்துறை மற்றும் வேளாண் துறை அமைச்சர் என அழைக்கப்படுவார். கொரோனாவால் உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணு, வேளாண்மை, வேளாண் என்ஜீனியரிங், பட்டுப்பூச்சி வளர்ப்பு, கரும்பு வளர்ச்சி மற்றும் தரிசு நில மேம்பாடு உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்தார்.

எனவே, இத்துறைகளை இனி, உயர் கல்வி அமைச்சர் K.P. அன்பழகன் கவனிப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments