தேர்தல் பிரச்சாரத்தில் தவறுதலாக காங்கிரசுக்கு வாக்குகேட்ட பாஜக எம்பி
மத்திய பிரதேச சட்டப்பேரவை இடைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிக்கும்படி பாஜக எம்பி ஜோதிராதித்ய சிந்தியா தவறுதலாக வேண்டுகோள் விடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
காங்கிரசிலிருந்து விலகி ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பாஜகவில் சேர்ந்ததால், காலியான 28 தொகுதிகளுக்கு 3ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
தாப்ராவில் பிரசாரக் கூட்டத்தில் சிந்தியா பங்கேற்று பாஜக வேட்பாளர் இமார்தி தேவிக்கு ஆதரவு திரட்டினார். அப்போது கை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
தவறை புரிந்து கொண்ட அவர், உடனடியாக தாமரைக்கு வாக்களிக்கும்படி கூட்டத்தினருக்கு கோரிக்கை விடுத்தார்.
Comments