மருத்துவ உயர்சிறப்பு படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீகித உள் இடஒதுக்கீடு : மத்திய அரசின் கருத்தை திரும்பப் பெற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0 1588
மருத்துவ உயர்சிறப்பு படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீகித உள் இடஒதுக்கீடு : மத்திய அரசின் கருத்தை திரும்பப் பெற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மருத்துவ உயர்சிறப்பு படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% உள்ஒதுக்கீடு வழங்க உடன்பாடு இல்லை என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ள கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள் இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ள நிலையிலும், அரசு மருத்துவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க அதிமுக அரசு முன்வராதது, இட ஒதுக்கீட்டு உரிமையை பறிகொடுத்து வருவதை சுட்டிக்காட்டுவதாக கூறியுள்ளார்.

அரசு மருத்துவர்களுக்கு 2016-க்கு முன்பு வரை தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டை, உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி மீண்டும் அமல்படுத்த ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments