கோயம்பேடு மொத்த வியாபாரப் பழக்கடைகள் நாளை முதல் திறப்பு : முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் ஆய்வு

0 1297
கோயம்பேடு மொத்த வியாபாரப் பழக்கடைகள் நாளை முதல் திறப்பு : முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் ஆய்வு

சென்னை கோயம்பேட்டில் மொத்த வியாபாரப் பழக்கடைகள் நாளை திறக்கப்படவுள்ள நிலையில், முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார். 

கொரோனா காரணமாக மாதவரம் பகுதிக்கு மாற்றப்பட்ட பழக்கடைகள், நாளை முதல் மீண்டும் கோயம்பேட்டில் செயல்படவுள்ளன.

உடல் வெப்ப சோதனைக்குப் பின்னரே வாடிக்கையாளர்களுக்கு அனுமதி, கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே வாகனங்களுக்கு அனுமதி, பயணிகள் ஆட்டோ, இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை, தனிநபர் கொள்முதல் மற்றும் சில்லறை வணிகர்களுக்குத் தடை, அனைத்துக் கடைகளிலும் முகக்கவசம், உடல் வெப்பமானி, ஆக்சி மீட்டர், கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments