தமிழகம் முழுவதும் 29 மாவட்டங்களில் 491 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் 29 மாவட்டங்களில் 491 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 30ம் தேதி நிலவரப்படி கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 113 கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கடுத்து அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 49 கட்டுப்பாட்டு பகுதிகளும் , திருவாரூர் மாவட்டத்தில் 41 கட்டுப்பாட்டு பகுதிகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல், ஈரோடு, பெரம்பலூர், சிவகங்கை, தஞ்சாவூர், தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லையெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments