50 ஆண்டு குத்தகைக்கு மங்களூரு ஏர்போர்ட் அதானி குழுமத்திடம் ஒப்படைப்பு

0 3782
50 ஆண்டு குத்தகைக்கு மங்களூரு ஏர்போர்ட் அதானி குழுமத்திடம் ஒப்படைப்பு

மங்களூரு விமான நிலையத்தை 50 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் அதானி குழுமத்திடம், விமான நிலையங்களை ஆணையம் வழங்கியுள்ளது.

மங்களூரு, திருவனந்தபுரம், லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், குவஹாத்தி ஆகிய 6 விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க போவதாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் அரசு அறிவிப்பு வெளியானது.

இதற்காக கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளின் அடிப்படையில் இந்த 6 விமான நிலையங்களும் அதானி குழுமம் வசம் சென்றுள்ளன.

அதானியுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், மங்களூரு, லக்னோ, அகமதாபாத் விமான நிலையங்கள் முறையே அக்டோபர் 31, நவம்பர் 2 மற்றும் 11 ஆம் தேதிகளில் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடந்த 22 ஆம் தேதி விமான நிலையங்கள் ஆணையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments