கேரளாவில் நெய்யார் வனவியில் பூங்காவில் இருந்து தப்பித்த புலி: பூங்காவை சுற்றி வசிக்கும் மக்கள் பீதி
கேரளாவின் வயநாட்டு காடுகளில் கூண்டில் சிக்கிய 9 வயதான பெண்புலி, திருவனந்தபுரம் நெய்யார் வனவியல் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பிய செய்தி அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிகிச்சை அளிப்பதற்காக இந்த புலி நெய்யார் லயன் சபாரி பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது.
நேற்று பிற்பகல் கூண்டை பல்லால் கடித்து உடைத்து தப்பிய பெண்புலியை வனத்துறையினர் தேடினர். இன்று காலை சோர்வடைந்த நிலையில் புலியை கண்டதாக வனத்துறையினர் கூறினர்.
வயநாட்டில், தொடர்ந்து ஆடு மாடு உள்ளிட்டவற்றை அடித்துக் கொன்று தின்றதை தொடர்ந்து கூண்டு வைத்து இந்த புலியை வனத்துறையினர் பிடித்தனர். அதில் புலிக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Comments