ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 6 சட்டதிருத்த மசோதாக்கள் தாக்கல்

0 1424
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 6 சட்டதிருத்த மசோதாக்கள் தாக்கல்

விவசாயிகளை கட்டாயப்படுத்தி குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவாக விளைபொருட்களை வாங்க ஒப்பந்தம் போட்டால், 3 முதல் 7 ஆண்டு சிறைத் தண்டனையும் 5 லட்சம் ரூபாய்வரை அபராதம் விதிக்கவும் வகை செய்யும் மசோதா, ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது உள்பட 6 சட்டதிருத்த மசோதாக்கள் நேற்று தாக்கலாயின. அவற்றில், விளைபொருட்களை வாங்கி 3 நாட்களுக்குப் பிறகும் பணம் கொடுக்காத வியாபாரிகளுக்கும் இதே தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்த்தின் அடிப்படையில் நடக்கும் வேளாண் உற்பத்தி தவிர இதர விளைபொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை கட்டாயமில்லை என மற்றோர் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த 6 மசோதாக்களில் 4 மசோதாக்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை மீறும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளன. நாளை இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments