திருமங்கலம் அருகே 80 ஆடுகள் மற்றும் 60 கோழிகளை பலியிட்டு நடத்தப்பட்ட பிரியாணி திருவிழா
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கோயிலில் 80 ஆடுகள் மற்றும் 60 கோழிகளை பலியிட்டு பிரியாணி திருவிழா நடத்தப்பட்டுள்ளது.
டி.அம்மாபட்டி கிராமத்தில் இருக்கும் சடச்சி அம்மன் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவில் 20 சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடி கிடாய்கள் வெட்டி பலியிட்டு அம்மனுக்கு படையலிட்டு கொண்டாடுவார்கள்.
இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக பொங்கல் வைக்கப்படுவது தடை செய்யப்பட்டு, எளிமையாக விழா நடத்தப்பட்டது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 80 ஆடுகள் மற்றும் 60 கோழிகள் நேற்று நள்ளிரவு அம்மனுக்கு பலியிடப்பட்டது. பின்னர் 1500 கிலோ அரிசியுடன் இறைச்சியை கலந்து பிரியாணி தயார் செய்யப்பட்டு, பிளாஸ்டிக் வாளிகளில் வைத்து வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கப்பட்டது.
Comments