காங்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

0 1054
காங்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்

அரசுக்கு எதிரான ADF என்ற அமைப்பினர் கிழக்குப் பகுதியில் உள்ள லிசாசா என்ற கிராமத்தில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் 15 பெண்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்.

மேலும் அப்பகுதியில் இருந்த மருத்துவமனை மற்றும் வழிபாட்டுத்தலம் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட பகுதிக்கு ராணுவத்தினர் விரைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments