உலகிலேயே அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முன்னணியில் உள்ளதாக தகவல்
உலகிலேயே அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முன்னணியில் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக சயின்ஸ் அட்வான்ஸஸ் இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலக மக்கள்தொகையில் 4 சதவீதம் பேர் உள்ள அமெரிக்காவில் 17 சதவீத பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
217 நாடுகளில் வெளியான பிளாஸ்டிக் கழிவு குறித்த தரவுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் தனிநபர் ஆண்டு ஒன்றுக்கு 105 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments