துருக்கி நிலநடுக்கம் : கடலில் நிறுத்தப்பட்ட படகுகள் அடித்து செல்லப்படும் வீடியோ
துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தண்ணீரில் அடித்து செல்லப்படும் வீடியோ வெளியாகி உள்ளது.
அங்கு கடந்த 30ந் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 என்ற அளவிற்கு பதிவாகி இருந்தது. இதன் காரணமாக சுனாமி தாக்கியதில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.
நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. காயம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
#Turkey #Izmir Yachts and boats pulled by the sea right before the earthquake pic.twitter.com/aPgq1ej4mz
— Kgthetweet (@Kgthetweet) October 30, 2020
Comments