ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: பெங்களூரு அணியை வீழ்த்தி ஐதராபாத் அணியும், டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணியும் வெற்றி

0 2100
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: பெங்களூரு அணியை வீழ்த்தி ஐதராபாத் அணியும், டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணியும் வெற்றி

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் சேர்த்தது. 121 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணி 14.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

அதுபோல் மற்றொரு ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 14.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments