ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேச நலனை எண்ணி செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி
குறைந்தபட்ச அரசு, நிறைவான நிர்வாகம் என்பதை மந்திரமாக கொண்டு, தேசிய நலனில் முடிவுகள் எடுக்குமாறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று குஜராத் மாநிலம் கெவாடியாவில் இருந்துகொண்டு, பயிற்சிக்காலம் முடித்து, முழுமையான பணிக்குள் நுழைய உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் காணொலி காட்சி வழியாக பேசினார்.
மக்கள்தான் அரசு அதிகாரத்தின் உண்மையான உந்து சக்தி. என்று கூறிய பிரதமர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தங்களது தலையீட்டை குறைத்துக்கொண்டு, சாதாரண மக்களுக்கு அதிகாரம் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Comments