ஜேம்ஸ் பாண்டு 90 திடீர் மரணம்..!

0 6412
ஜேம்ஸ் பாண்ட் படங்களின் ஆரம்பகால நாயகனான ஷான் கானரி உடல் நலக்குறைவால் காலமானார். அதிரடி சாகச காட்சிகள் மூலம் திரை ரசிகர்களை கவர்ந்தவர் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

ஜேம்ஸ் பாண்ட் படங்களின் ஆரம்பகால நாயகனான ஷான் கானரி உடல் நலக்குறைவால் காலமானார். அதிரடி சாகச காட்சிகள் மூலம் திரை ரசிகர்களை கவர்ந்தவர் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

ஆரம்பகால ஜேம்ஸ் பாண்ட் படங்களின் நாயகன் ஷான் கானரி காலமானார். அவருக்கு வயது 90.

ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரின் குடிசைப் பகுதியில் பிறந்தவர் தாமஸ் ஷான் கானரி. பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போனதால் தினக்கூலியாக வாழ்க்கையை தொடங்கியவர். ராணுவத்தில் பணியாற்றிய ஷான் கானரி 1950ஆம் ஆண்டு மிஸ்டர் யூனிவர்ஸ் போட்டியிலும் பங்கெடுத்துள்ளார்.

23 வயது முதல் பல்வேறு நாடகங்களிலும், திரைப்படங்களில் துணை நடிகராகவும் நடித்து வந்த ஷான் கானரி, 1962ஆம் ஆண்டு, 'டாக்டர் நோ' படத்தில் ரகசிய உளவாளி ஜேம்ஸ் பாண்டாக நடித்ததுதான் மூலம் அதிரடி ஆக் ஷன் நாயகனாக புகழின் உச்சிக்குச் சென்றார்.

கோல்டு பிங்கர், தண்டர்பால் என அடுத்தடுத்து ஷான் கானரி நடித்த விதவிதமான சாகசகாட்சிகள் நிறைந்த 7 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களும் உலகம் முழுவதும் மகத்தான வெற்றிகளை குவித்தன.

90 களின் இறுதியில் நம்ம ஊரு நாயகர்கள் செய்த காதலை 60 களிலேயே ஜேம்ஸ் பாண்ட் படங்களில் செய்து இளம் ரசிகர்களை மட்டுமல்லாமல் ஏராளமான ரசிகைகளையும் கவர்ந்தவர் ஷான் கானரி..

'தி அண்டச்சபிள்ஸ்' என்ற படத்திற்காக சிறந்த உறுதுணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஷான் கானரி வென்றார். 2 பாஃப்தா விருதுகள், 3 கோல்டன் குளோப் விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.

40 வருடங்களுக்கும் மேலாக நடித்து வந்த ஷான் கானரி 2007 ஆம் ஆண்டுடன் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். ஷான் கானரி நடித்த 'இண்டியானா ஜோன்ஸ்’ திரைப்படத்தின் மூன்றாம் பாகம், 'தி ஹண்ட் ஃபார் தி ரெட்' அக்டோபர், 'தி ராக்' உள்ளிட்ட திரைப்படங்களும் அவருக்கு புகழைத் தேடித் தந்தன.

கடந்த ஆகஸ்டு மாதம் தனது 90-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஷான் கானரி, வயது மூப்பு காரணமாக மரணமடைந்தாலும் அவர் நடித்த ஜேம்ஸ் பாண்ட் கதா பாத்திரங்கள் ஒவ்வொன்றும் சாகாவரம் பெற்றவை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments