இன்று முதல் கேஸ் சிலிண்டர் டெலிவரி, ரயில்களின் அட்டவணை உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாறுதல்கள் அமல்

0 48291
இன்று முதல் கேஸ் சிலிண்டர் டெலிவரி, ரயில்களின் அட்டவணை உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாறுதல்கள் அமல்

நவம்பர் ஒன்றாம் தேதியான இன்று முதல் ரயில்வே கால அட்டவணை முதல் புதிய கேஸ் சிலிண்டர் டெலிவரி வரை பல்வேறு முக்கிய மாறுதல்கள் அமல்படுத்தப்படுகின்றன.

வீடுகளில் கேஸ் சிலிண்டர் பெற விரும்புவோருக்கு ஓடிபி எண் அளிக்கப்படும். முதலில் இத்திட்டம் நூறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட் நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

வாடிக்கையாளரின் செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணைத் தெரிவித்தால்தான் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும். சர்வதேச விலையைப் பொருத்து மாதத்தின் முதல் தேதியில் சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்தியா முழுவதும் 77189 55555 என்ற ஒரே தொலைபேசி எண் மூலம் கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரயில்களின் நேரங்கள் இன்று முதல் மாற்றியமைக்கப்படுகின்றன. புதிய ரயில்வே டைம்டேபிள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments