ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்த பிரபல நடிகர் ஷீன் கானெரி காலமானார்

0 2266
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்த பிரபல நடிகர் ஷீன் கானெரி காலமானார்

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்த பிரபல நடிகர் ஷீன் கானெரி, 90 வயதில் காலமானார்.

ஸ்காட்லாந்தில், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவருக்கு,  திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 80 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஷீன் கானெரி, ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் மூலம் உலகம் முழுதும் பிரபலமடைந்தார்.

தனது 50 ஆண்டு திரை பயணத்தில், ஆஸ்கர், பாப்டா , கோல்டன் குளோப் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில், பஹாமஸ் தீவில், உள்ள வீட்டில்  உறங்கும் போது இவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments