அனைவருக்கும் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது விதிமீறல் ஆகாது - தேர்தல் ஆணையம்

0 1728
அனைவருக்கும் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது விதிமீறல் ஆகாது - தேர்தல் ஆணையம்

அனைவருக்கும் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது விதிமீறல் ஆகாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.

இது நடத்தை விதிகளை மீறிய செயல் எனக் கூறிச் சமூக ஆர்வலர் சாகேத் கோகலே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இதை விசாரித்த ஆணையம், நலத்திட்டங்களைச் செய்வதாகத் தேர்தல் அறிக்கையில் உறுதி அளிப்பது நடத்தை விதிகளை மீறியது ஆகாது எனத் தெரிவித்துள்ளது.

உறுதிமொழி நிறைவேற்றப்படும் என நம்பிக்கை ஏற்படுத்தினால் மட்டுமே வாக்காளர்களின் ஆதரவைப் பெற முடியும் எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments