அஜர்பைஜானுடனான போர் தீவிரமடைந்தால், அர்மீனியாவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக ரஷ்யா திடீர் அறிவிப்பு..!
அஜர்பைஜானுடனான போர் தீவிரமடைந்தால் ஆர்மீனியாவுக்கு ஆதரவளிப்போம் என்று ரஷ்யா திடீரென அறிவித்துள்ளது.
ரஷ்யா தலைமையிலான முன்னாள் சோவியத் யூனியன் கூட்டமைப்பில் அஜர்பைஜானும் ஆர்மீனியாவும் அங்கம் வகித்தன. சோவியத் யூனியன் சிதைவுக்கு பிறகு அந்த 2 நாடுகளுடனும் ரஷ்யாவுக்கு நல்லுறவு நிலவி வருகிறது. இதனால் இருநாடுகளுக்கு இடையே நடைபெறும் போரில் ரஷ்யா நடுநிலை வகிக்கிறது.
இந்நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1997ம் ஆண்டு செய்த பாதுகாப்பு ஒப்பந்தபடி, ஆர்மீனியா பகுதிக்கு போர் விரிவடையும் பட்சத்தில், அந்நாட்டுக்கு ஆதரவளிப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments