திடீரென எழுந்த பேரலையில் சிக்கி கவிழ்ந்த படகு விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி
குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப்படகு திடீரென எழுந்த பேரலையில் சிக்கி கவிழும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
வெள்ளிக்கிழமை காலை தேங்காய்பட்டணம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து நாட்டுப்படகு ஒன்றில் 5 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
படகு தங்கல்வள்ளம் முகத்துவாரம் பகுதியில் சென்ற போது, திடீரென எழுந்த பேரலையில் சிக்கி கவிழ்ந்தது.
மீனவர்கள் 4 பேர் நீந்தியே கரை வந்து சேர்ந்த நிலையில், ஒருவரின் சடலம் தேங்காய்பட்டணம் துறைமுகம் பகுதியில் கரை ஒதுங்கியது.
முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டு காரணமாக கடல் அலை மேலெழும் வேகம் அதிகரிப்பதாக சொல்லப்படும் நிலையில், மணல் திட்டை அகற்றவும், கடலின் ஆழத்தை அதிகப்படுத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது.
Comments