வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலை மிகவும் கவலைக்கிடம் - காவேரி மருத்துவமனை

0 9638

வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக (extremely crictical) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல்நிலை பின்னடைவை சந்தித்தது. இதனால் எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மருத்துவமனை தரப்பில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், அமைச்சரின் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,  உயிர்காக்கும் கருவி மூலம்  சிகிச்சை அளிக்கும் நிலையிலும் மிகவும் கவலைக்கிடமாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments