மின்சார வாகனங்களுக்குச் சாலை வரி, பதிவுக் கட்டணம் இல்லை - தெலங்கானா மாநில அரசு அறிவிப்பு
மின்சார வாகனங்களுக்குச் சாலை வரி, பதிவுக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்துவதில் இருந்து நூறு விழுக்காடு விலக்களிப்பதாகத் தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது.
2030ஆம் ஆண்டு வரைக்கான மின்சார வாகனங்களுக்கான கொள்கையைத் தெலங்கானா அரசு வெளியிட்டுள்ளது. முதல் 2 லட்சம் இருசக்கர வாகனங்கள், 20 ஆயிரம் மூன்று சக்கர வாகனங்கள், 20 ஆயிரம் வணிகப் பயன்பாட்டு வாகனங்கள், 500 பேருந்துகளுக்குச் சாலை வரி, பதிவுக் கட்டணம் ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
அதேபோல் மின்சார டிராக்டர்களுக்கும் சாலை வரி, பதிவுக் கட்டணம் ஆகியவற்றில் இருந்து விலக்களிப்பதாக அறிவித்துள்ளது. தெலங்கானாவில் வாங்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு இந்தச் சலுகை என அறிவித்துள்ளது.
Comments