3 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன் - பாலிவுட் நடிகை பாத்திமா சான ஷேக்
பாலிவுட் நடிகை பாத்திமா சான ஷேக், தான் 3 வயது குழந்தையாக இருந்தபோதே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார்.
அவ்வை சண்முகியின் இந்தி ரீமேக்கில், கமல்ஹாசனின் மகளாக அறிமுகமான பாத்திமா சனா ஷேக், தங்கல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.
இவர், அளித்த பேட்டி ஒன்றில், திறைத்துறைக்கு தொடர்பில் இல்லாத குடும்பத்தில் இருந்து நடிக்க வந்த தான், பல்வேறு பாலியல் இம்சைகளை எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் உறவின் மூலமே திரைப்பட வாய்ப்புகளை பெறமுடியும் என பலர் தன்னை நிர்பந்தித்தாக பாத்திமா கூறியுள்ளார்.
Comments