நந்தா கல்வி நிறுவன அறக்கட்டளை பள்ளி-கல்லூரிகளில் 3 நாள்களாக நீடித்த வருமானவரி சோதனை நிறைவு

0 2169
நந்தா கல்வி நிறுவன அறக்கட்டளை பள்ளி-கல்லூரிகளில் 3 நாள்களாக நீடித்த வருமானவரி சோதனை நிறைவு

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள நந்தா கல்வி நிறுவன அறக்கட்டளையின்கீழ் செயல்படும் பள்ளி- கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் 3 நாள்களாக நீடித்த வருமான வரித்துறை சோதனை நள்ளிரவுடன் நிறைவடைந்தது.

வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து,  அறக்கட்டளை தலைவர் சண்முகனின் பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களிலும் கோவையில் இருந்து வந்த 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். 

சண்முகன், அவரது 2 மகன்கள் பிரதீப் , திருமூர்த்தி ஆகியோரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

இதில் 5 கோடி ரூபாய் ரொக்கம், 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து பத்திரங்கள், முதலீடு, வரி ஏய்ப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள்  சிக்கியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments