சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு பிரதமர் மலர்தூவி மரியாதை...

0 5058
சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு பிரதமர் மலர்தூவி மரியாதை...

குஜராத்தில் ஒற்றுமை சிலை என்று அழைக்கப்படும் பிரமாண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, அங்கு தொடங்கப்படும் கடல் விமான சேவை சுற்றுலாத் தொழிலை வளர்க்கும் என  தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான இன்று, தேசிய ஒற்றுமை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, குஜராத் மாநிலம் கவடியா பகுதியில் நர்மதை ஆற்றில் அமைந்துள்ள ஒற்றுமை சிலை என்று பெயரிடப்பட்டுள்ள பட்டேலின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து ஒற்றுமை தின பேரணியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பார்வையிட்டார். அங்கு நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை விரல்களால் தாளம்போட்டபடியே பிரதமர் ரசித்தார்.

விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவை ஒரே தேசமாக ஒருங்கிணைத்து ஒற்றுமைப்படுத்திய, இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு புகழாரம் சூட்டினார். அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றில் இருந்து புறப்பட்டு கவடியாவில் நர்மதை ஆற்றில் இறங்கும் கடல் விமான சேவை சுற்றுலாத் தொழிலுக்கு ஊக்கம் அளிக்கும் என்றார்.

புல்வாமா தாக்குதல் நடந்தபோது சிலர் அதற்காக வருந்தாமல், அதைவைத்து அரசியல் செய்து கொண்டிருந்ததாகக் குற்றம்சாட்டினார். தேசத்தின் நலன் சார்ந்த விஷயங்களில் அரசியல் செய்ய வேண்டாம் என அவர்களை கேட்டுக்கொள்வதாகக் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments