போலி நிறுவன பில்கள் மூலமாக ரூ 1278 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு - ஜிஎஸ்டி வரித்துறை அதிகாரிகள்

0 3303
போலி நிறுவன பில்கள் மூலமாக ரூ 1278 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு - ஜிஎஸ்டி வரித்துறை அதிகாரிகள்

போலி நிறுவன பில்கள் மூலமாக ஆயிரத்து 278 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி . வரி ஏய்ப்பு செய்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஏழு போலியான நிறுவனங்கள் இந்த விவகாரத்தில் 137 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக சிக்கியுள்ளன. ஜிஎஸ்டி வரித்துறை அதிகாரிகள் நேற்று டெல்லியில் ஒன்பது இடங்களிலும் அண்டை மாநிலமான ஹரியானாவின் சில இடங்களிலும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.

இதில் மிகப்பெரிய மோசடியை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக சிலரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments