பில் மட்டுமே 2 மீட்டர் நீளம்...77 முறை போக்குவரத்து விதி மீறல்... ஸ்பாட்டில் ரூ.42,000 அபராதம்

0 6690

பெங்களூருவில் 77 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியவரிடத்திலிருந்து ரூ.42, 000 ஸ்பாட்டில் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் போலீசார் கரிசனமே காட்டுவதில்லை .  40 , 50 , 60 முறை கூட போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக சிலர் அபராதம் செலுத்தியுள்ளனர். அந்த வகையில் நேற்று இளைஞர் ஒருவர் 77 முறை விதிகளை மீறியதாக பிடிபட்டார். பெங்களூரு மடிவாளா போக்குவரத்து போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டபோது , அருண்குமார் என்பவரை மடக்கினர். தொடர்ந்து, அருண்குமார் விதிமுறையை மீறியுள்ளாரா என்று ஆய்வு செய்தனர் .

அருண்குமாரின் இரு சக்கர வாகன எண்ணை போலீசாரின் ஸ்பாட் பைன் இயந்திரத்தில் தட்டச்சு செய்த போது , ஹெல் மெட் அணியாமல் பயணித்தது , சிக்னல் ஜம்பிங் , அதிவேகமாக வாகன ஓட்டியது என 77 முறை போக்குவரத்து விதிகளை மீறியிருப்பது தெரியவந்தது . மேலும்,  ரூ. 42,000 அபாரதம் செலுத்த வேண்டும் என்றும் அந்த இயந்திரம் கணக்கு காட்டியது. அபராதம் தொடர்பான ரசீது மட்டும் 2 மீட்டர் நீளத்துக்கு இருந்தது .

ரசீதை அருண்குமாரிடத்தில் கொடுத்த போலீசார் ரூபாய் 42,000 ஆயிரம் அபராத தொகையாக செலுத்தும்படி உத்தர விட்டனர் . அருண்குமாரும் நேற்று அந்த தொகையை செலுத்தினார் . 77 முறை போக்குவரத்து விதி முறையை மீறியதாக ஒருவர் அபராதம் செலுத்தியது இதுவே முதன் முறை என்று பெங்களூருபோக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments