முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்தை காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இருந்து நீக்கியது தேர்தல் ஆணையம்

0 2119
முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்தை காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இருந்து நீக்கியது தேர்தல் ஆணையம்

காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்திடமிருந்து நீக்கியது தேர்தல் ஆணையம்.

மத்தியப் பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.  இதில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக  கமல்நாத் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பிரச்சார பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அவர் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டால் அந்த கூட்டத்திற்கான செலவு அப்பகுதி எம்எல்ஏ கணக்கில் சேர்க்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments