ஐபிஎல் தொடர்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில், ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில், அதிரடியாக ஆடிய கெயில் 8 சிகசர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உட்பட 99 ரன்களில் அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து, களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். அதிகபட்சமாக பென்ஸ்டோக்ஸ் 50 ரன்களையும், சஞ்சு சாம்சன் 48 ரன்களையும் சேர்க்க, 17.3 ஓவரில் ராஜஸ்தான் அணி இலக்கை எட்டியது. இதனால் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் ராஜஸ்தான அணியும் தொடர்ந்து நீடிக்கிறது.
Comments