திண்டுக்கல் : வயிற்று வலி.. மாத்திரை வாங்கக் காசில்லாததால் 14 வயது சிறுமி தற்கொலை

0 7356

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கடும் வயிற்று வலியால் அவதிபட்ட 8 ஆம் வகுப்பு மாணவி, பெற்றோர்கள் மருந்து வாங்கித் தராததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நூற்பாலையில் வேலை பார்க்கும் கண்ணன் சசிகலா தம்பதியின் 14 வயது மகள் ஐஸ்வர்யா, மாதவிடாயின் போது ஏற்பட்ட வயிற்று வலிக்கு மாத்திரை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.

பணம் இல்லாததால், வேலைக்குச் சென்று விட்டுத் திரும்பும் போது மாத்திரை வாங்கி வருவதாகத் தாயார் சசிகலா தெரிவித்துள்ளார். இதனால், மனமுடைந்த சிறுமி துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments