7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு : ஆளுநருக்கு முதலமைச்சர் நன்றி - அமைச்சர் ஜெயக்குமார்

0 1749
7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு : ஆளுநருக்கு முதலமைச்சர் நன்றி - அமைச்சர் ஜெயக்குமார்

மருத்துவப் படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று மாலை சந்தித்துப் பேசினார்.

சுமார் 40 நிமிடங்கள் நீடித்த சந்திப்பின்போது, உள் ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தந்தமைக்காக, ஆளுநருக்கு, முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், 2011ஆம் ஆண்டு முதல், தற்போது வரையிலான, அதிமுக ஆட்சியில், 3 ஆயிரத்து 50 மருத்துவ இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற்றதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments