காஷ்மீரில் 3 பாஜக தொண்டர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் : பின்னணியில் எல்.இ.டீ தீவிரவாதிகள் எனத் தகவல்

0 2018
காஷ்மீரில் 3 பாஜக தொண்டர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் : பின்னணியில் எல்.இ.டீ தீவிரவாதிகள் எனத் தகவல்

ஜம்மு-காஷ்மீரின், குல்காம் மாவட்டத்தில், மூன்று பாஜக தொண்டர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் இருப்பதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கும், காஷ்மீர் சரக காவல்துறை ஐ.ஜி விஜயகுமார், தாக்குதலில் ஈடுபட்டவர்கள், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் ஸ்லீப்பர் செல்கள் போல் செயல்படும், அமைப்பினர் என தெரிய வந்திருப்பதாக கூறியுள்ளார்.

குல்காம் மாவட்டத்தில், ஒய்.கே.போரா என்ற இடத்தில், பிடா உசேன், உமர் ரஷீத், உமர் ஹஜாம் ஆகிய, 3 பாஜக தொண்டர்கள், காரில் சென்றுகொண்டிருந்தபோது, வியாழக்கிழமை இரவு 8.20 மணியளவில், பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments